உள்ளூர் செய்திகள்

பள்ளி மாணவர் உருவாக்கிய கிருமி நீக்கும் சுத்திகரிப்பான்

மும்பை: காய்கறிகள், பழங்கள் உட்பட பொருட்களில் இருந்து, கொரோனா வைரஸ் உட்பட கிருமிகளை நீக்கும் கருவியை, புனேயைச் சேர்ந்த பள்ளி மாணவர் உருவாக்கியுள்ளார்.ஊதா கதிர்வீச்சுமஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, தேசியவாத காங்., மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது.இங்குள்ள புனேயைச் சேர்ந்த பள்ளி மாணவர் ஆதித்யா பச்பாண்டே, 14, ரசாயனங்களை பயன்படுத்தாமல் பழங்கள் மற்றும் காய்கறிகளில் இருந்து கிருமிகளை நீக்கும், புற ஊதா கதிர்வீச்சு அடிப்படையிலான சுத்திகரிப்பானை உருவாக்கியுள்ளார்.மத்திய அரசிடம் இருந்து காப்புரிமை பெற்றுள்ள இந்த சுத்திகரிப்பானை, பொதுமக்களுக்கு அவர் இலவசமாக வழங்கி வருகிறார். இதுகுறித்து, ஆதித்யா பச்பாண்டே கூறியதாவது:&'ஒவ்வொரு நெருக்கடியும், ஒரு சிறந்த வாய்ப்பை உருவாக்குகிறது&' என, ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் உருவாக்கிய வார்த்தைகளால் நான் ஈர்க்கப்பட்டேன். உறுதிசிறு வணிகம் செய்வோர் மற்றும் வீடுகளில், இந்த இயந்திரம் சிறப்பாக பயன்படும். அமெரிக்க உணவு மற்றும் மருந்து சங்கம், புற ஊதா கதிர்வீச்சு, கொரோனா வைரசை முற்றிலுமாக அழிப்பதை உறுதி செய்துள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்