உள்ளூர் செய்திகள்

சிறப்பு மருத்துவ படிப்பு அரசு டாக்டர்கள் வழக்கு

சென்னை: மருத்துவ சிறப்பு படிப்புகளில், அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர்களுக்கான, 50 சதவீத இடங்களை ஒதுக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரசின் நிலையை தெரிவிக்கும்படி, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை, ராயப்பேட்டை, அரசு மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் சையது பக்ருதீன்,டாக்டர் குமாரவேல் தாக்கல் செய்த மனு: கடந்த, 2017ம் ஆண்டு, முதுநிலை மருத்துவ படிப்புகளில், அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர்களுக்கு வழங்கப்பட்ட ஒதுக்கீடு நிறுத்தப்பட்டது.உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும், இந்த முடிவை எடுத்தன.பின்னர், உச்ச நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகள் அடங்கிய அமர்வு, அரசு டாக்டர்களுக்கு ஒதுக்கீடு வழங்க, மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என, 2020 ஆகஸ்ட்டில் தீர்ப்பளித்தது.எனவே, மருத்துவ சிறப்பு படிப்புகளில், அரசு டாக்டர்களுக்கான, 50 சதவீத இடங்களை வழங்க வேண்டும். இந்த இடங்களை ஒதுக்கீடு செய்யாமல், முதல் கட்ட, &'ஆன்லைன்&' கவுன்சிலிங் நடத்த, தடை விதிக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதி ஆனந்த் வெங்க டேஷ் முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில், வழக்கறிஞர் ஜி.சங்கரன் ஆஜரானார். அரசு தரப்பில், அட்வ கேட் ஜெனரல் விஜய் நாராயண், &'&'இந்த விஷயத்தில், அரசு விரைவில் முடிவெடுக்கும். மறு உத்தரவு வரும் வரை, ஆன்லைன் கவுன்சிலிங்கை தள்ளி வைத்திருப்பதாக, சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டு உள்ளது,&'&' என்றார். இதையடுத்து, அரசின் நிலையை தெரிவிக்கும்படி உத்தரவிட்டு, விசாரணையை, வரும், 16ம் தேதிக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தள்ளி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்