ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி: மாணவ மாணவிகள் குவிந்தனர்
எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வு எழுத உள்ள கிராமப்புற மாணவ மாணவிகளுக்காக பிரத்யேகமாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப் பட்டது. கனமழையை பொருட்படுத்தாமல் அதிகாலையிலேயே மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் குவிந்தனர்.வில்லியனூர் ஆச்சார்யா பள்ளி முதல்வர் மணிவிஜயராகவன், விழாவை துவக்கி வைத்து பேசினார்.தன்னம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள் வது, பொதுத்தேர்வை பயமின்றி எழுதுவது, ஒவ்வொரு பாடத்திலும் 100 சதவீத மதிப் பெண்கள் பெறுவதற்கான வழிமுறைகள், பாடங்களை திட்டமிட்டு படிப்பது குறித்து கல்வியாளர்கள் ஆலோசனைகளை வழங்கினர்.மாணவ-மாணவிகள் தங்கள் உடல் நலம், மன நலனை காப்பது எப்படி, நேர நிர்வாகம், தேர்வுக்கு முன்பும், தேர்வுக்கு முதல் நாள் மற்றும் தேர்வு அறையில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும், பாடவாரியாக அதிக மதிப்பெண்கள் பெறவும் டிப்ஸ்கள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கான முக்கிய வினாக்கள் அடங்கிய புத்தகம் தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும், உடம்பும் மனசும் நல்லா இருக்கனும் புத்தகம், பேனா, நோட்டுப் புத்தகம் ஆகியவை தினமலர் சார்பில் இலவசமாக வழங்கப்பட்டது.ஆச்சார்யா பள்ளியின் என்.எஸ்.எஸ்., மாணவர்கள், தன்னார்வலர்கள் விழாவில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளை ஒழுங்குபடுத் தும் பணியில் ஈடுபட்டனர்.