உள்ளூர் செய்திகள்

கல்வி கட்டணம் விஷயத்தில், அனைவருக்கும் சாதகமான முடிவு

பெங்களூரு: "பெற்றோர் மற்றும் தனியார் பள்ளி, கல்லுாரிகளுக்கிடையே, இழுபறிக்கு காரணமான, கல்வி கட்டணம் விஷயத்தில், அனைவருக்கும் சாதகமான முடிவை அரசு எடுக்கும்," என, தொடக்க, உயர்நிலைப்பள்ளி கல்வித்துறை அமைச்சர் சுரேஷ்குமார் தெரிவித்தார்.பெங்களூரில், அவர் நேற்று கூறியதாவது:கொரோனா காரணமாக, மாணவர்களின் பெற்றோர், பொருளாதார நெருக்கடியில் சிக்கினர். பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்படாததால், தனியார் பள்ளிகளும் தொந்தரவுக்கு ஆளாகின. எனவே கடந்தாண்டு கல்வி கட்டணத்தில், 30 குறைக்கும்படி, அரசு உத்தரவிட்டது.இந்த உத்தரவை, பெரும்பாலான தனியார் பள்ளி நிறுவனங்கள் வரவேற்றன. சில கல்வி நிறுவனங்கள், அதிருப்தி தெரிவித்தன. இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.கொரோனா காரணமாக, கட்டணம் செலுத்த, பெற்றோர் தயங்கியதால், தனியார் பள்ளிகள் தொந்தரவுக்கு ஆளாகின. இந்த நேரத்தில், கல்வித்துறை இதற்கு முன், ஒரு தவணை கட்டணத்தை செலுத்தும்படி, பெற்றோருக்கு உத்தரவிட்டு, சுற்றறிக்கை வெளியிட்டிருந்தது.அதே போல, இந்த கட்டண தொகையில், ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு ஊதியம் செலுத்தும்படி, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டது. தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டதால், அடுத்த கல்வி கட்டண தவணையை செலுத்தும்படி, தனியார் பள்ளிகள் நெருக்கடி கொடுக்கின்றன. 30 சதவீதம் குறைத்து, கட்டணம் செலுத்த பெற்றோர் முன் வந்துள்ளனர். அரசு சுற்றறிக்கை வெளியிட்டதால் தான், பெற்றோர் கட்டணம் செலுத்த முன் வந்தனர் என்பதை, பள்ளிகள் புரிந்து கொள்ள மறுக்கின்றன.பெற்றோர் மற்றும் தனியார் பள்ளி, கல்லுாரிகளுக்கு இடையே, இழுபறிக்கு காரணமான, கல்வி கட்டணம் விஷயத்தில், அனைவருக்கும் சாதகமான முடிவை அரசு எடுக்கும். இந்த பிரச்னையை, எப்படி தீர்க்க வேண்டுமென, யாராவது ஆலோசனை கூறினால், அதை ஏற்க நான் தயாராக இருக்கிறேன். இப்பிரச்னையை பேச்சு மூலம் தீர்க்க வேண்டும். பெற்றோர், பள்ளி நிர்வாகம், கல்வித்துறை அமர்ந்து பேசலாம். இந்த ஆண்டு வரை, அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும். பிள்ளைகளின் எதிர்காலத்தை காப்பாற்ற, நாம் முன் வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்