உள்ளூர் செய்திகள்

பட்டய கணக்கர் தேர்வில் சாதித்த இஸ்லாமிய பெண்

காரைக்கால்; பட்டய கணக்கர் தேர்வில் தேர்ச்சி பெற்று, புதுச்சேரி மாநிலத்தில் இஸ்லாமிய சமுதாயத்தில் முதல் மகளிர் பட்டய கணக்கர் என்ற பெருமை பெற்ற மாணவிக்கு காரைக்கால் கலெக்டர் அர்ஜூன்சர்மா நினைவு பரிசு வழங்கி பாராட்டினார்.காரைக்கால் வேட்டைக்காரன் தெருவை சேர்ந்தவர் சித்திக் முஹம்மது. இவரது மகள் பாத்திமாபர்வீன்(23) இவர் நிரவி காவேரி பொதுப்பள்ளியில் பத்தாம் வகுப்பும், அன்னை தெரசா அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் பிளஸ் 2 பயின்றார்.கடந்த 2015ம் ஆண்டு நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்று, சென்னை ஆடிட்டரிடம் பட்டய கணக்கர் பயிற்சி பெற்று வந்தார். கடந்தாண்டு நடைபெற்ற தேர்வில் பங்கேற்று, புதுச்சேரி மாநிலத்தில் இஸ்லாமிய சமுதாயத்தில் முதல் மகளிர் பட்டய கணக்கர் என்ற பெருமையை பெற்றார்.பாத்திமாபர்வீன் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் அர்ஜூன் சர்மாவை சந்தித்து வாழ்த்து பெற்றார். கல்வித் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்