உள்ளூர் செய்திகள்

பெரம்பலூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு பிப்ரவரியில் அடிக்கல்

பெரம்பலூர்: “பெரம்பலூர் அரசு மருத்துவக்கல்லூரி அமைக்க வரும் பிப்ரவரியில் அடிக்கல் நாட்டு விழா நடக்கிறது” என மத்திய இணை அமைச்சர் நெப்போலியன் தெரிவித்தார். பெரம்பலூர், திருச்சி, கரூர் விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் பெரம்பலூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்திற்குபின் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்புத்துறை அமைச்சர் நெப்போலியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது, “பெரம்பலூர் அரசு மருத்துவக்கல்லூரிக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் அடிக்கல் நாட்டு விழா நடக்கிறது. அதற்கான ஏற்பாடு பணிகள் தற்போது நடந்து வருகிறது” என்று தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்