இங்கிலாந்து அறக்கட்டளையுடன் தமிழ்ப் பல்கலைக் கழகம் ஒப்பந்தம்
தமிழகத்தில் மட்டும் 5 லட்சத்து 48 ஆயிரத்து 134க்கும் அதிகமான ஓலைச்சுவடிகள் இருப்பதாக மத்திய அரசின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இதையொட்டி முதல்வர் கருணாநிதி பிறந்த தினத்தை முன்னிட்டு தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகம் மாவட்டம் தோறும் ஓலைச் சுவடிகளை திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளது. உலக செம்மொழி மாநாடு கோவையில் நடக்க உள்ளது. இதை ஒட்டியும் தமிழ் ஓலைச்சுவடிகளைத் திரட்டி டிஜிட்டலை சேஷன் செய்யும் பணியில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகம் ஈடுபட்டுள்ளது. இந்த பணியில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த தமிழ் மரபு அறக்கட்டளையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. இதில் துணைவேந்தர் ராஜேந்திரன், இங்கிலாந்து நாட்டு தமிழ் மரபு அறக்கட்டளை துணைத் தலைவர் சுபாசினி ஆகியோர் கையொப்பம் இட்டனர். பதிவாளர் கார்த்திகேயன், சுவடி துறைத் தலைவர் மாதவன், பேராசிரியர்க்ள பாஸ்கரன், அதியமான், ஜெயக்குமார், செல்வக்குமார், அண்ணாமலை ஆகியோர் உடனிருந்தனர்.