உள்ளூர் செய்திகள்

தாய்மொழியை முன் மொழியாக்க உருது ஆசிரியர்கள் கோரிக்கை

செஞ்சி : தமிழ்நாடு உருது பள்ளி ஆசிரியர் கழகத்தின் மாநிலப்பொதுக்குழு கூட்டம் மற்றும் ஐம்பெரும் விழா செஞ்சியில் நடந்தது. இதில் உருது பள்ளிகளின் தரம் உயர்த்தி, ஆசிரியர் பணி இடங்களை நிரப்பியமைக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. சமச்சீர் கல்வி முறையில் அவரவர் தாய் மொழியை முன் மொழியாகவும், தமிழ் கட்டாய பாடமாகவும், ஆங்கிலம் இரண்டாவது மொழியாகவும் அறிவிக்க வேண்டும், சிறுபான்மை உருது மொழி பள்ளிகளில் 15 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம் ஆசிரியர்களை நியமிக்கவும் வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. விழாவில் சென்னை பல்கலைக்கழக உருது மொழித்துறைத் தலைவர் சையத் சஜ்ஜாத் உசேன் தலைமையில் கவியரங்கம் நடந்தது. மாநிலத்தலைவர் முஹமத் ஜக்ரியாகான் தலைமை தாங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்