நீலகிரி கலை அறிவியல் கல்லுாரிக்கு நாக் அங்கீகாரம்
கோவை: நீலகிரி கலை அறிவியல் கல்லுாரிக்கு, தேசிய திறனாய்வு அங்கீகார கவுன்சில் (நாக்) ஏ -++ அங்கீகாரம் அளித்துள்ளது.இது குறித்து, நீலகிரி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் நிர்வாக இயக்குனர் ராஷித் கசாலி கூறுகையில், சரியான அறிவுத்திறனை வளர்ப்பதோடு, நீலகிரி கல்லுாரியானது திறன் மேம்பாடு மற்றும் மதிப்பு கூட்டுவதிலும் அதிக கவனம் செலுத்தியது. பன்னாட்டு நிறுவனங்களில், மாணவர்கள் வேலை வாய்ப்புகளை பெற்றனர். உயர் கல்விக்கென உயர்ந்த இடமாக மாறியது கல்லூரி. தன்னாட்சி கல்லுாரியாக வளர்ச்சி பெற்று, ஒரு தனியார் பல்கலையாக உருவெடுத்து வருவதை, கனவாக கொண்டு செயல்பட்டு வருகிறது, என்றார்.