உள்ளூர் செய்திகள்

எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு மையம் கிராமங்களில் இனி கிடையாது!

பெங்களூரு: எஸ்.எஸ்.எல்.சி., தேர்வுக்கு, கிராமப்பகுதிகளில் தேர்வு மையம் அமைக்க வேண்டாம் என கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.எஸ்.எஸ்.எல்.சி., தேர்வின் போது, கிராமப்பகுதிகளில் மாணவர்கள் கூட்டாக காப்பி அடிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை தீவிரமாக கருதிய, கர்நாடக தேர்வாணையம் அதை கட்டுப்படுத்த, நடவடிக்கை எடுக்க திட்டமிட்டது. வரும் 2024 மார்ச், ஏப்ரலில் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வை, எந்த குளறுபடியும் இல்லாமல் நடத்துவது, தேர்வாணையத்தின் எண்ணமாகும். எனவே இம்முறை கிராமப்பகுதிகளில் தேர்வு மையம் அமைக்க வேண்டாம் என, உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகிஉள்ளது.கடந்தாண்டு கர்நாடகாவின் 724 மாவட்ட, 755 தாலுகா, 604 பேரூராட்சி, 1,222 கிராமப்பகுதி தேர்வு மையங்களில், எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு நடத்தப்பட்டது. இம்முறை கிராமங்களில், தேர்வு மையங்கள் அமைக்கப்படாது. மாவட்ட, தாலுகா, பேரூராட்சிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்