உள்ளூர் செய்திகள்

ஈஸ் ஆப் ஸ்கூலிங்: அரசு பள்ளிகளில் அறிமுகம்

திருப்பூர் மாவட்ட அரசு பள்ளிகளின், தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சில பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள், மாணவர்களுடன் அதிக நேரம் செலவழிப்பதால், அவர்களுடன் நண்பர்களாக பழகி, கல்வித்தரத்தை மேம்படுத்தவும் முற்படுகின்றனர். அதேபோல, போதைப்பழக்கங்களுக்கு, மாணவர்கள் அடிமையாகாமால் இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அவ்வகையில், தற்போது, அரசு பள்ளிகளில், புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, ஒவ்வொரு திட்டத்தின் நோக்கத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கென, ஈஸ் ஆப் ஸ்கூலிங் என்ற திட்டம் துவக்கப்படவுள்ளது.அதன்படி, மாவட்ட கல்வி அலுவலர்கள், பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களை உள்ளடக்கிய ஆலோசனைக் கூட்டம், கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடக்கிறது. திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், இன்று நடக்கும் கூட்டத்தில், மாவட்ட ஊரக மேம்பாட்டு அலுவலக இயக்குனர், புகழ்பெற்ற கல்வி வல்லுனர்கள் உள்ளிட்டோரும் கலந்து கொள்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்