உள்ளூர் செய்திகள்

அகில இந்திய தொழில் தேர்வு; விண்ணப்பங்கள் வரவேற்பு

அடுத்த ஆண்டு ஜூலை மாதம், கைவினைஞர் பயிற்சி திட்டத்தின் கீழ், தேசிய தொழிற் பயிற்சி குழுமம் சார்பில், அகில இந்திய தொழிற் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதில் தனித் தேர்வர்களாக பங்கேற்க விரும்புவோர், விண்ணப்பப் படிவம், முழு விபரங்கள் அடங்கிய விளக்க கையேடு ஆகியவற்றை, www.skilltraining.tn.gov.in இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.தேர்வு கட்டணம், 200 ரூபாயை, www.karuvoolam.tn.gov.in இணையதளம் வழியாக அல்லது தமிழக அரசின் கருவூலம், பாரத ஸ்டேட் வங்கி கருவூலக் கிளை வழியாக, இ - சலான் வழியே செலுத்த வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, வரும், 18ம் தேதிக்குள், அரசு ஐ.டி.ஐ., முதல்வர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்