கூட்டுறவு மேலாண்மை பட்டய படிப்பு: விண்ணப்பங்கள் வரவேற்பு
புதுச்சேரி: ஓராண்டு கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பம் இணையவழியே விண்ணப்பிக்கலாம்.இதுகுறித்து, கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் சாரங்கபாணி விடுத்துள்ள செய்தி குறிப்பு:புதுச்சேரி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2023-24ம் ஆண்டிற்கான ஓராண்டு கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கு, கடந்த 13ம் தேதி முதல் இணைய வழியே விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இப்பயிற்சியில் சேர 17 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். குறைந்த பட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம்.இந்த பட்டயப் பயிற்சியில், கூட்டுறவு மேலாண்மை, நிதி மேலாண்மை, நிர்வாகம், வங்கியல், கணக்கியல், தணிக்கை, கடன் மற்றும் கடன் சார்பற்ற சங்கங்கள் கூட்டுறவு மற்றும் இதர சட்டங்கள், கணினி மேலாண்மை, நகை மதிப்பீடு அதன் தொழிட்நுட்பங்கள் ஆகிய பாடங்கள் பயிற்சி அளிக்கப்படுகின்றன. தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.இவ்வாறு செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.