உள்ளூர் செய்திகள்

எக்ஸ் கணக்கு துவங்க ஆண்டு கட்டணம் விதிப்பு

லண்டன்: எக்ஸ் சமூக ஊடகத்தில் போலி கணக்குகளை குறைக்கும் நோக்கில், புதிய கணக்கு துவங்குவோர், ஆண்டுக்கு இந்திய மதிப்பில், 83 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.பிரபல, டுவிட்டர் சமூகவலைதளத்தை அமெரிக்க தொழிலதிபரான எலான் மஸ்க் கடந்த ஆண்டு பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்கினார். இதையடுத்து, டுவிட்டரின் பெயரை, எக்ஸ் என மாற்றினார். மேலும், ஆட்குறைப்பு உள்ளிட்ட பல அதிரடி நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டார்.இந்நிலையில், எக்ஸ் சமூக ஊடகத்தில் போலி கணக்குகளை குறைக்க, புதிய கணக்கு துவங்குவோர் மற்றும் சரிபார்க்கப்படாத கணக்கு வைத்திருப்போர், ஆண்டுக்கு இந்திய மதிப்பில், 83 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கட்டணம் செலுத்தினால் மட்டுமே, ஒரு பதிவை லைக் செய்வது, அதை ரீபோஸ்ட் செய்வது, மற்றவர்களின் பதிவை மேற்கோள் காட்டி ரீபோஸ்ட் செய்வது, புக்மார்க் செய்வது ஆகியவற்தை மேற்கொள்ள முடியும்.இத்திட்டம் முதற்கட்டமாக, நியூசிலாந்து மற்றும் பிலிப்பைன்சில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில், இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் விரிவுபடுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. இத்திட்டம், ஏற்கனவே உள்ள பயனர்களை எந்த விதத்திலும் பாதிக்காது என, தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்