மருத்துவம் படிக்க நிதியுதவி கவர்னர் தமிழிசை வழங்கல்
புதுச்சேரி: சென்டாக் மாணவர் பெற்றோர் சங்கம் திரட்டிய நிதியுதவியை, மருத்துவ மாணவிக்கு கவர்னர் தமிழிசை வழங்கினார்.மீனவ சமுதாய மாணவி மதுமீதா நீட் தேர்வில் 491 மதிப்பெண் பெற்றார். இவருக்கு புதுச்சேரி மாநில அரசு இட ஒதுக்கீட்டில் மருத்துவம் பயில சீட் கிடைத்தது. ஆனால், வறுமை காரணமாக இரண்டு ஆண்டுகளாக மருத்துவம் படிக்க முடியாமல் தவித்து வந்தார்.புதுச்சேரி யூனியன் பிரதேச அனைத்து சென்டாக் மாணவர் பெற்றோர் நலச்சங்கம் சார்பில், மாணவி மதுமிதா முதலாமாண்டு மருத்துவம் படிக்க ரூ. 5 லட்சத்து 30 ஆயிரம் திரட்டப்பட்டது. வறுமை ஒழிப்பு தினத்தையொட்டி, சென்டாக் மாணவர் பெற்றோர் நலச்சங்க தலைவர் நாராயணசாமி தலைமையில், கவர்னர் தமிழிசை கவர்னர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் மாணவி மதுமிதாவுக்கு நிதியுதவியை வழங்கினார்.கார்த்திகேயன், சுகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.