பொது இடத்தில் பள்ளி அனுமதி வேண்டி கடிதம்
சோழிங்கநல்லுார்: சோழிங்கநல்லுார் மண்டலம், 195வது வார்டு, ராஜிவ்கார்டனின் மனைகள் பிரிக்கும் போது, 2,097 சதுர மீட்டர் இடம், பொது பயன்பாட்டுக்காக, ஓ.எஸ்.ஆர்., என்ற திறந்தவெளி இடமாக ஒதுக்கப்பட்டது.இந்த இடம், எந்த பயன்பாடும் இல்லாமல் காலியாக உள்ளது. இதில், மாநகராட்சி பள்ளி கட்டடம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையையடுத்து, இடத்தை வகைப்பாடு மாற்ற, மண்டல கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந்த தீர்மானம் அடிப்படையில், நிலம் மற்றும் உடைமைத்துறை வாயிலாக, நிலம் பயன்பாட்டு மாற்ற ஒப்புதல் வேண்டி, அரசுக்கு கடிதம் எழுதி தீர்மானித்திருப்பதாக, மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.