உள்ளூர் செய்திகள்

தமிழக சுற்றுலா துறைக்கு ஜப்பான் நாட்டு விருது

சென்னை: தமிழகத்தின் மன்னார் சுற்றுச்சூழல் சுற்றுலா திட்டத்தை பாராட்டி, ஜப்பான் சுற்றுலா துறை விருது வழங்கி உள்ளது.ராமநாதபுரம் மாவட்டம், மன்னார் வளைகுடா கடல் தேசிய பூங்காவில், 21 தீவுகள் உள்ளன. அவற்றில், சதுப்பு நிலங்கள், பவளப்பாறைகள் உள்ளன. இங்கு, உள்ளூர் மக்கள் பங்களிப்புடன் குருசடை, தருவைகுள பகுதிகளில் சுற்றுச்சூழல் சுற்றுலா; காரங்காட்டில் சதுப்புநில சுற்றுலா; ஏர்வாடியில் பவளப்பாறை சுற்றுலா உள்ளிட்டவை, கண்ணாடி இழை படகுகள் வாயிலாக செயல்படுத்தப்படுகின்றன.இந்நிலையில், ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில், நேற்று ஏழாவது சர்வதேச சுற்றுலா விருது வழங்கும் விழா நடந்தது. அதில், தமிழகத்தின் மன்னார் வளைகுடா சுற்றுலா திட்டத்தை பாராட்டும் வகையில் விருது வழங்கப்பட்டது.இதை, ஜப்பான் சுற்றுலா கண்காட்சி செயற்குழு தலைவர் ஹிரோயுகி தகாஹாஷி வழங்க, தமிழக சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன் பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில், சுற்றுலா துறை முதன்மை செயலர் மணிவாசன் பங்கேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்