உள்ளூர் செய்திகள்

திண்டிவனம் அரசு கல்லுாரியில் நாக் கமிட்டியினர் ஆய்வு

திண்டிவனம்: திண்டிவனம் அரசு கலைக் கல்லுாரியில், தேசிய தர நிர்ணயக் குழுவினர் (நாக் கமிட்டி) ஆய்வு செய்தனர்.லக்னோவில் உள்ள நாராயம் மிதிலா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சுரேந்திர பிரதாப் சிங் தலைமையில், கல்லுாரி முதல்வர் பர்கத் சிங் கர்ச்சா, டாக்டர் நாகேந்திரநாத் பாண்டே கொண்ட குழுவினர் திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக்கல்லுாரியில் ஆய்வு நடத்தினர்.ஆய்வின்போது, கல்லுாரியில் துறை வாரியாக பேராசிரியர்களிடம், செயல்பாடுகள் குறித்து விளக்கம் கேட்டனர். கல்லுாரியின் முதல்வர் நாராயணன் (பொறுப்பு) மற்றும் பேராசிரியர்கள் உடனிருந்தனர்.தொடர்ந்து கல்லுாரி பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களிடம் தனித்தனியாக ஆலோசனை நடத்தினர். கல்லுாரியின் கட்டமைப்பு, அடிப்படை வசதிகள் உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு செய்தனர். தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டனர்.உயர்கல்வி நிறுவனங்களை மதிப்பீட்டு தரவரிசைப்படுத்தும் நாக் கமிட்டியினர், திண்டிவனம் அரசு கல்லுாரியில் நடத்திய ஆய்விற்குப்பின், நான்கு பிரிவுகளின் அடிப்படையில், திண்டிவனம் அரசு கல்லுாரி எந்த வரிசையின் கீழ் வரும் என்று அறிக்கை தாக்கல் செய்யும்.அதன் அடிப்படையில் திண்டிவனம் அரசு கலைக்கல்லுாரிக்கு மத்திய அரசின் பல்கலைக்கழக மானியக்குழுவின் (யூ.ஜி.சி.,) நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என கல்லுாரி தரப்பில் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்