உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளியில் ஆபத்தான பணியில் ஈடுபட்ட மாணவர்

பூண்டி: திருவள்ளூர் மாவட்டம் பூண்டியில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் ஆறு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை, 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். 25க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியில் உள்ளனர்.இந்த பள்ளியில் உடற்கல்வி ஆசிரியரின் அறை மீது, பழைய பள்ளி கட்டடத்தின் ஓடுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இந்த கட்டடத்தை துாய்மை செய்யும் பணி நேற்று முன்தினம் நடந்தது. இதில், பள்ளி மாணவர்கள் ஏணி மீது ஏறி கட்டடத்தின் மேலே இருந்த ஓடுகளை கீழே இறக்கும் பணியில் ஈடுபட்டனர்.மாடி மீது ஏறிய ஒரு மாணவர் கீழே நிற்பவரிடம், கேட்ச் முறையில் ஓடுகளை வீசினார். கீழே நிற்கும் மாணவர் பாதுகாப்பு உபகரணம் ஏதுமின்றி கேட்ச் பிடித்து அடுக்கி வைக்கிறார். இதுகுறித்தான வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. மாணவர்களை ஆபத்தான பணியில் ஈடுபடுத்துவதால், பெற்றோர் அச்சம் அடைந்து உள்ளனர். இதுகுறித்து கல்வி துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்