கல்வி உரிமை சட்டம்: மாதிரி விதிமுறைகள் தயார்
இந்த மாதிரி விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளதாவது: ஒவ்வொரு மாநில அரசும், மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் அமைக்க வேண்டும். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான பள்ளிகள், 1 கி.மீ., சுற்றளவிற்கு உள்ளும், ஆறு முதல் எட்டு வரையிலான வகுப்புகள் உள்ள பள்ளிகள் 3 கி.மீ., சுற்றளவிற்கு உள்ளும் அமைந்திருக்கவேண்டும். இவ்வாறு வரையறுக்கப்பட்ட தூரத்திற்குள் பள்ளிஅமையவில்லை என்றால், இலவச போக்குவரத்து வசதிகளுக்கு, மாநில அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அந்த விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.