உள்ளூர் செய்திகள்

புகையிலை பொருள் விற்பனை பள்ளி அருகே சோதனை

வெள்ளகோவில்: மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதார பணிகள் இயக்குநரகம் உத்தரவின் பேரில், வெள்ளகோவில் பகுதிகளில், கல்வி நிறுவனங்களின் அருகே உள்ள கடைகளில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.மாவட்ட நல கல்வியாளர் ராஜ்குமார், சுகாதார ஆய்வாளர் கதிரவன், புகையிலை தடுப்பு பிரிவு பிரவீன் ஆகியோர் வெள்ளகோவில் பஸ் ஸ்டாண்ட் மற்றும் பள்ளிகள் அருகேயுள்ள கடைகளில் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது, பள்ளிகளின் அருகே, விற்பனைக்காக புகையிலை பொருட்கள் வைத்திருந்த 4 கடைகளில் சிகரெட் மற்றும் புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.பஸ் ஸ்டாண்ட் மற்றும் பொது இடங்களில் புகைபிடித்த 18 பேருக்கு தலா நுாறு ரூபாய் என மொத்தம் 1,800 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், வெள்ளகோவில் வட்டார சுகாதார நிலையத்தில் பொதுமக்கள் மற்றும் மருத்துவ அலுவலர்கள், ஊழியர்கள் புகையிலை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்