உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளி மாணவர்கள் திறனாய்வு தேர்வில் தேர்ச்சி

தர்மபுரி: தர்மபுரியில், நடப்பு கல்வி ஆண்டிற்கான தமிழக முதல்வரின் திறனாய்வு தேர்வு போட்டிகள், தர்மபுரி அடுத்த இண்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.இதில், தர்மபுரி அடுத்த அதகபாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த பிளஸ் 1 மாணவியர் ஜனனி மற்றும் வனிதா, மாணவர் தங்கபாண்டி ஆகியோர் பங்கேற்று, இந்த திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெற்றனர்.இவர்களுக்கு, இளநிலை பட்டப்படிப்பு வரை ஒரு கல்வியாண்டிற்கு, 10,000 ரூபாய் வீதம் தமிழக அரசால் கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. தேர்ச்சி பெற்ற மாணவர்களை, இப்பள்ளியின் தலைமை ஆசிரியை கவிதா, தமிழக முதல்வரின் திறனாய்வு தேர்வு பொறுப்பு ஆசிரியர்கள் அகமதுஷெரீப், புவனேஸ்வரி, கோபிநாத், முருகேசன், ரபிக் ஆகியோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்