உள்ளூர் செய்திகள்

மருத்துவ மாணவர்களுக்கு வெள்ளை அங்கி அணிவிக்கும் விழா

விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரியில் 2023 - 24 முதலாமாண்டு மருத்துவ மாணவர்கள் 150 பேருக்கு வெள்ளை அங்கி அணிவிக்கும் விழா நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்து அங்கிகளை வழங்கினார். கல்லுாரி முதல்வர் அனிதா மோகன், மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை கண்காணிப்பாளர் அருண், துணை கண்காணிப்பாளர் அன்புவேல், கல்லுாரி பேராசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.கலெக்டர் ஜெயசீலன் பேசியதாவது: மருத்துவ மாணவர்கள் மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட அரசு மருத்துவக்கல்லுாரியில் பயில்கிறீர்கள். அடித்தட்டு மக்களுக்கு பயன்படும் அளவிற்கு தங்களின் தகுதியை வளர்த்துக்கொள்ள வேண்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்