கூட்டுறவு உதவியாளர் பணி தேர்வுக்கு ஹால் டிக்கெட்
சென்னை: சென்னையில் உள்ள கூட்டுறவு சங்கங்களில், காலியாக உள்ள உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு, ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.வரும் 24ம் தேதி ஆறு மையங்களில் எழுத்து தேர்வு நடக்கிறது. இதற்கான ஹால் டிக்கெட்டை, www.drbchn.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விபரங்களுக்கு, 044 - 2461 6503, 044 - 2461 4289 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, சென்னை ஆள்சேர்ப்பு நிலையம் தெரிவித்துள்ளது.