வேலையில்லா பட்டதாரிகளுக்கு ஊக்கத்தொகை; ஷிவமொகாவில் முதல்வர் துவக்கம்
பெங்களூரு: வேலையில்லா பட்டதாரிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் யுவநிதி திட்டத்துக்கு வரும் 26ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். ஜனவரி 12ல் ஷிவமொகாவில் முதல்வர் சித்தராமையா துவக்கி வைக்கிறார், என மருத்துவ கல்வி துறை மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சரண் பிரகாஷ் பாட்டீல் தெரிவித்தார்.சட்டசபை தேர்தலின் போது, காங்கிரஸ் தரப்பில் ஐந்து வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டன. இதில், நான்கு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், ஏழை, எளிய மக்களை முழுமையாக சென்றடையவில்லை. நாங்கள் சொன்னதை செய்துள்ளோம் என்று காண்பிப்பதற்காக, கண் துடைக்கும் வேலை மட்டுமே செய்தனர். இதனால் மக்கள், ஏமாற்றத்தை சந்தித்து வருகின்றனர்.இதற்கிடையில், வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் 3,000 ரூபாயும்; டிப்ளமோ படித்தவர்களுக்கு 1,500 ரூபாயும் ஊக்கத்தொகை வழங்கும், யுவநிதி திட்டம் அமல்படுத்தப்படாமல் உள்ளது. இது குறித்து, மருத்துவ கல்வி துறை மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சரண்பிரகாஷ் பாட்டீல், பெங்களூரு விதான் சவுதாவில் கூறியதாவது:*யுவநிதி திட்டத்துக்கு வரும் 26ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். கர்நாடகாவில் வசிக்கும் கன்னடர்களுக்கும் மட்டும் பொருந்தும். 2023ம் ஆண்டில் தேர்ச்சி பெற்று, 180 நாட்கள் வேலை கிடைக்காதவர்கள் மட்டும் தகுதி பெறுவர்*விண்ணப்பித்த நாள் முதல், வேலை கிடைக்கும் வரையிலோ அல்லது அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும்*சேவாசிந்து இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். வங்கி கணக்கிற்கு நேரடியாக ஊக்கத் தொகை செலுத்தப்படும்*வேலையில் உள்ளவர்கள் தவறான தகவலுடன் விண்ணப்பித்தால் தண்டனை விதிக்கப்படும்*ஆறு மாதங்களுக்குரிய வங்கி கணக்கு பாஸ் புத்தகம் வழங்க வேண்டும்*முதுகலை பட்டம் படிப்பவர்களுக்கு பொருந்தாது*ஜனவரி 12ம் தேதி, ஷிவமொகாவில் முதல்வர் சித்தராமையா துவக்கி வைக்கிறார்*மாநிலம் முழுதும், 5,29,153 பயனாளிகள் இருப்பர் என்று கணிக்கப்பட்டுள்ளதுஇவ்வாறு அவர் கூறினார்.