குடியரசு தின அணிவகுப்புக்கு ராமகிருஷ்ணா மாணவி தேர்வு
கோவை: ஜன.,26ம் தேதி குடியரசு தின அணிவகுப்பிற்காக, முப்படையினர், காவல்துறையினர், தேசிய மாணவர் படையினர், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இதில், நவ இந்தியா, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரியில், இளநிலை வணிகவியல் கணக்கியல் மற்றும் நிதியியல் துறை, இரண்டாமாண்டு மாணவி பவ்யாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.மாணவி பவ்யாவை, எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் லட்சுமிநாராயணசுவாமி, முதல்வர் சிவக்குமார், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பிரகதீஸ்வரன் ஆகியோர் வாழ்த்தினர்.