உள்ளூர் செய்திகள்

பிடித்த படிப்பை படியுங்கள் : மாணவர்களுக்கு அறிவுரை

சூலுார்: பிடித்த படிப்பை படியுங்கள் என கல்வியாளர் காயத்ரி சுரேஷ் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.சூலுார் அடுத்த முத்துக்கவுண்டன் புதூரில் விவேகானந்தர் அரங்கில், தேர்வில் வெற்றி பெறுவது எப்படி? என்ற தலைப்பில் கல்வியாளர் காயத்ரி சுரேஷ் மாணவர்கள் மத்தியில் பேசியதாவது:முதலில் உங்களுக்கு எந்த பாடங்கள் பிடிக்கும் என்பதை பட்டியலிடுங்கள். அதில், எந்த பாடம் மிக அதிகமாக பிடிக்கும் என்பதை முடிவு செய்து, அதை தேர்வு செய்யுங்கள். அந்த படிப்பில் சேர்ந்து படித்தால் உங்களின் ஆர்வம் அதிகரிக்கும். நண்பர்கள் கூறினார்கள், பெற்றோர், உறவினர்கள் கூறினார்கள் எனக்கூறி, விருப்பம் இல்லாத படிப்பில் சேர்ந்து விடக்கூடாது. அது, உங்கள் எதிர்காலத்தையே கேள்வி குறியாக்கி விடும்.பெற்றோர் தான் உங்களின் முதல் நண்பர்கள். அவர்களிடம் எதையும் மறைக்க வேண்டாம். மனம் விட்டு பேசுங்கள். பெற்றோரும் பிள்ளைகளின் கருத்தை கேட்க வேண்டும். தேர்வு காலங்களில் மொபைல் போனை கையில் எடுக்காதீர்கள். தேர்வுகளை கண்டு பயம் கொள்ள தேவையில்லை. வரலாறு, புவியியல் மற்றும் மொழி பாடங்களை படித்தால், வேலை வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அவற்றை தயக்கமின்றி தேர்வு செய்து படியுங்கள். வெற்றி நிச்சயம் உங்களை தேடி வரும்.இவ்வாறு, அவர் பேசினார்.சுற்றுவட்டாரத்தை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். மாணவர்களின் சந்தேகங்களுக்கு அவர் விளக்கமளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்