உள்ளூர் செய்திகள்

புத்தாண்டு கொண்டாட்டத்திலும் புத்தக திருவிழாவில் திரண்ட மக்கள்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு புத்தக திருவிழா நான்காம் நாள் விழாவில், எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார் பேசினார்.அவர் பேசியதாவது:புத்தக திருவிழா, பொதுமக்கள், இளைஞர்கள் அதிகமாக புத்தகங்கள் வாங்கி வாசிப்பு திறனை மேம்படுத்துவதற்காகவே நடத்தப்படுகிறது. புத்தகங்களை படித்தால் தான், சமூக மாற்றங்களை ஏற்படுத்த முடியும். வீடுகள்தோறும், நுாறு புத்தகங்கள் வைத்து நுாலகம் அமைக்க வேண்டும்.இதை தவிர்க்க, பெற்றோர் புத்தகம் படித்தால், குழந்தைகளும் படிப்பார்கள். புத்தகங்களை படிக்கவில்லை என்றால், வாழ்க்கையில் முன்னேற முடியாது. புத்தகங்கள் படித்தால், வாழ்க்கையில் உயர்ந்து செல்லாம்.இவ்வாறு அவர் பேசினார்.புத்தக திருவிழா ஐந்தாம் நாள் விழா நேற்று நடந்தது. அதில், ஈரோடு மகேஷ், ராமகிருஷ்ணன் ஆகியோர் பேசினர். புத்தாண்டு தினத்திலும், புத்தக திருவிழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர்.இன்று ஆறாம் நாள் விழாவிற்கு, செங்கல்பட்டு சப்- கலெக்டர் நாராயணசர்மா தலைமை ஏற்கிறார். நலம்- இனி நம் முதல் தேடல் என்ற தலைப்பில் டாக்டர் சிவராமன், ஊக்கமது கைவிடேல் என்ற தலைப்பில் பட்டிமன்ற பேச்சாளர் மோகனசுந்தரம் ஆகியோர் பேசுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்