உள்ளூர் செய்திகள்

கல்லுாரி கல்வி இயக்குனரக முன்னாள் இயக்குனர் சஸ்பெண்ட்

சென்னை: கல்லுாரி கல்வி இயக்குனர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட, அரசு கல்லுாரி முதல்வர் திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.அரசு கல்லுாரிகளுக்கான இயக்குனரகம், சென்னை சைதாப்பேட்டையில் செயல்படுகிறது.இதன் இயக்குனர் பொறுப்பை, திருவாரூர் திரு.வி.க., அரசு கலை கல்லுாரி முதல்வர் கீதா, கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார். கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் அவர் பணியில் இருந்தார். இந்நிலையில், 10 மாதங்கள் முடிந்த நிலையில், அவரை இயக்குனர் பதவியில் இருந்து நீக்கி, ஐ.ஏ.எஸ்., அதிகாரி கார்மேகத்தை கல்லுாரி கல்வி இயக்குனராக தமிழக அரசு நியமித்தது.இதையடுத்து, திரு.வி.க., அரசு கலை கல்லுாரி முதல்வர் பொறுப்பில் இருந்தும், பேராசிரியை கீதா நேற்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.இதற்கான உத்தரவை, உயர்கல்வி துறை செயலர் கார்த்திக் பிறப்பித்து உள்ளார்.பல்வேறு புகார்களால் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக, உத்தரவில் கூறப்பட்டுள்ளது. முதல்வரின் சஸ்பெண்டை கண்டித்து, திருவாரூர் திரு.வி.க., அரசு கலை கல்லுாரி மாணவ - மாணவியர் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.அப்போது, பேராசிரியை கீதா பேசுகையில், சிலர் தவறான பிரசாரம் செய்து, புகார் அளித்துள்ளனர். அதை சட்டப்படி சந்திப்பேன், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்