உள்ளூர் செய்திகள்

துணை மருத்துவ கவுன்சிலில் உறுப்பினராக நியமிக்க வலியுறுத்தல்

மதுரை: மருத்துவ ஆய்வுக்கூட நுட்புனர்களின் கோரிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், நீதிமன்ற உத்தரவுப்படி துணை மருத்துவ கவுன்சில் அமைத்து, அதில் ஒவ்வொரு சங்கத்தில் இருந்தும் தகுதியான உறுப்பினர்களை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.தமிழ்நாடு மருத்துவ ஆய்வக நுட்புனர் சங்க மாநில செயலாளர் மரியதாஸ் விடுத்துள்ள அறிக்கை:முப்பது ஆண்டுகளாக எங்களுக்கான கவுன்சில் அமைக்க வலியுறுத்தி வருகிறோம். தற்போது துணை மருத்துவ கவுன்சில் அமைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இதனை வரவேற்கிறோம்.இதனடிப்படையில் ஒவ்வொரு சங்கத்தில் இருந்தும் தகுதிவாய்ந்த உறுப்பினர்களை நியமிக்க வேண்டும். கொரோனா காலத்தில் நியமிக்கப்பட்ட கிரேட் 3 ஆய்வுக்கூட நுட்புனர்கள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நியமிக்கப்பட்டனர். இதில் 2 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படை பணி முடித்தவர்களில் நிரந்தரம் செய்யப்படாத 300 பேரை நிரந்தரம் செய்ய வேண்டும். நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிரந்தர பணியிடம் ஏற்படுத்த வேண்டும்.ஆரம்ப சுகாதார நிலையங்களில் அனுபவம் பெற்ற ஆய்வுக்கூட நுட்புனர்களை பணிமூப்பு அடிப்படையில் அரசு மருத்துவமனை, மருத்துவ கல்லுாரிகளில் நியமிக்க வேண்டும். இதனால் ஏற்படும் காலியிடங்களில் மருத்துவ தேர்வாணையத்தின் தேர்வு மூலம் பணியமர்த்த வேண்டும். மருத்துவ ஆய்வுக்கூட நுட்புனர்கள் நிலை 2 க்கான பணிமாறுதல் கலந்தாய்வும் நடத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்