சட்டக் கல்லூரி புது கட்டடம் திறக்க வழக்கு
மதுரை: கடந்த டிச., 2023ம் ஆண்டு கட்டுமானப்பணி நிறைவுப்பெற்ற மதுரை அரசு சட்டக் கல்லூரி புது கட்டத்தை திறக்க வழக்குத் தொடரப்பட்டுள்ளது.உசிலம்பட்டி அருகே முத்துப்பாண்டிபட்டி சூர்ய பாண்டி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:மதுரை அரசு சட்டக் கல்லுாரியில் இறுதியாண்டு படிக்கிறேன். இது 1974ல் துவக்கப்பட்டது. கட்டடம் பழுதடைந்தது. புது கட்டடம் அமைக்க ரூ.40 கோடியே 8 லட்சத்து 81 ஆயிரத்தை தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது.கட்டுமானப் பணி 2021 டிச.,10 ல் துவங்கி 2023 டிச.,11 ல் நிறைவடைந்தது. இதை பயன்பாட்டிற்கு கொண்டுவராததால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக சட்டத்துறை செயலர், அம்பேத்கர் சட்டப் பல்கலை பதிவாளருக்கு மனு அனுப்பினோம். புது கட்டடத்தை திறக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வு: மனுதாரர் கூடுதல் விபரங்களுடன் மனு செய்ய பிப்.,26 க்கு ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.