உள்ளூர் செய்திகள்

சிறப்பு பொருளாதார மண்டலம் ஏர்போட்டில் அமைக்க அனுமதி

புதுடில்லி: புதுடில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், 5 ஏக்கரில் சிறப்புப் பொருளாதார மண்டலம் மற்றும் தாராள வர்த்தக மண்டலம் ஆகியவை அமைக்க துணைநிலை கவர்னர் சக்சேனா, நேற்று ஒப்புதல் அளித்ததார்.இதுகுறித்து, டில்லி கவர்னர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை:புதுடில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலைய வளாகத்தில் ஏற்றுமதி, கிடங்கு, மற்றும் வர்த்தகம் மற்றும் தொடர்புடைய சேவைகளுக்காக, சிறப்பு பொருளாதார மண்டலம் மற்றும் தாராள வர்த்தக மண்டலம்ஆகியவை அமைக்க பரிந்துரை செய்யப்பட்டு இருந்தது.இதற்கு துணை நிலை கவர்னர் சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளார்.விண்ணப்பம், உரிமம், அனுமதி மற்றும் பிற நடைமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு அனுமதி வழங்கப்படும். இந்தமண்டலங்களில் தொழில் முனைவோருக்கு வரிச் சலுகைகள் வழங்கப்படும். இதன் வாயிலாக ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். மேலும், பொருளாதார வளர்ச்சி ஏற்படும்.சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம், டில்லியை பைலட் ஏர் கார்கோ ஹப் என அடையாளம் கண்டுள்ளது. இதற்கு அடுக்கு 1, 2 மற்றும் மூன்றாம் நிலை உள்கட்டமைப்பு தேவைப்படுகிறது.அதே நேரத்தில் டில்லி சர்வதேச விமான நிலைய நிறுவனம் ஏற்கனவே இரண்டு சரக்கு முனையங்கள் மற்றும் தளவாட மையங்களை மேம்படுத்தி, இரண்டடுக்கு உள்கட்டமைப்பை உருவாக்கியுள்ளது.இந்த சிறப்பு பொருளாதார மண்டலம் மற்றும் தாராள வர்த்தக மண்டலம் அமைந்தவுடன் அது மூன்றாவது அடுக்கை அடையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்