மகனை அரசுப் பள்ளியில் சேர்த்த ஆசிரியருக்கு பாராட்டு
புதுச்சேரி: அரசுப் பள்ளியில் மகனை சேர்த்த ஆசிரியருக்கு பாராட்டு குவிந்தது.புதுச்சேரி, லாஸ்பேட்டை, பெத்துசெட்டிப்பேட்டையில் அரசு தொடக்கப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் ஆசிரியர் ஜேம்ஸ்குமார் தனது மகன் ஜனஸ் ஜேம்ஸை, அதே பள்ளியில் முதல் வகுப்பில் சேர்த்தார்.நிகழ்வில், தலைமை ஆசிரியை தமயந்தி ஜாக்குலின் மற்றும் வட்ட துணை ஆய்வாளர் குலசேகரன் முன்னிலை வகித்தனர். பெரும்பாலான அரசுப் பள்ளி ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும், தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்ப்பது கிடையாது. தனியார் பள்ளிகளில் சேர்க்கவே ஆர்வம் காட்டுகின்றனர்.இதுபோன்ற சூழ்நிலையில், ஆசிரியர்ஜேம்ஸ்குமாரின் செயலுக்கு,சக ஆசிரியர்கள்,கல்வித்துறை அதிகாரிகள், உள்ளிட்டோர், பாராட்டையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.