உள்ளூர் செய்திகள்

விருதுநகரில் மருத்துவ கல்வி இயக்குனர் சங்குமணி ஆய்வு

விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் தமிழக மருத்துவக் கல்வி ஆராய்ச்சி மைய இயக்குனர் சங்குமணி ஆய்வு செய்தார்.இந்த ஆய்வில் மருத்துவமனைத் துறை தலைவர்களிடம் தனித்தனியாக தேவைகளை கேட்டறிந்தார். மருத்துவமனைக்கு காலதாமதமாக கிடைக்கக்கூடியவை குறித்து நிர்வாகத்தினர் தெரிவித்தனர். அதற்கு உடனடியாக கிடைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும், மருத்துவமனையில் பணம் செலுத்தியும் வராமல் உள்ள மிஷின்களை உடனடியாக வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்வதாக தெரிவித்தார். மேலும் மருத்துவமனையின் அனைத்து டாக்டர்களை அழைத்து ஆலோசனை செய்தார். விருதுநகர் அரசு மருத்துவமனையின் செயல்பாடுகள் நன்றாக இருப்பதாக தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்