உள்ளூர் செய்திகள்

டெட் தேர்ச்சி பெற்றவர்கள் தேர்தலை புறக்கணிக்க முடிவு

திருச்சி: கடந்த 2013ம் ஆண்டு, ஆசிரியர் தகுதி டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற 20,000 பேருக்கு பணி வழங்கப்படும் என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், சட்டசபை தேர்தலின் போது அறிவித்திருந்தார். அது பற்றி கேட்டு, கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் இல்லத்தை முற்றுகையிட்டு, தொடர் போராட்டம் நடத்திய பின், சென்னை தலைமைச் செயலகத்தில் பேச்சு நடத்தப்பட்டது.அதில், 50 சதவீதம் பேர் சீனியாரிட்டி அடிப்படையிலும், 50 சதவீதம் பேர் தகுதி தேர்வு எழுதியவர்களும் பணி அமர்த்தப்படுவர் என அமைச்சர்கள் மகேஷ், பொன்முடி மற்றும் பள்ளி கல்வித்துறை ஆணையர் ஆகியோர் உறுதியளித்தனர்.ஆனால், ஸ்டாலின் கொடுத்த தேர்தல் வாக்குறுதியையும், பேச்சில் அமைச்சர்கள் அளித்த உறுதிமொழியையும் தி.மு.க., அரசு நிறைவேற்றவில்லை. அதனால், ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்ற நலச்சங்கத்தினர், தி.மு.க.,வின் சட்டசபை தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்து, வரும் லோக்சபா தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்