உள்ளூர் செய்திகள்

சிவகங்கையில் மருத்துவ கல்வி இயக்குனர் சங்குமணி ஆய்வு

சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் தமிழக மருத்துவ கல்வி ஆராய்ச்சி மைய இயக்குனர் சங்குமணி ஆய்வு செய்தார்.இந்த ஆய்வில் மருத்துவமனை துறை தலைவர்களிடம் மருத்துவமனையின் தேவைகளை கேட்டறிந்தார். மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் எலக்ட்ரீசியன், பிளம்பிங் பணியாளர்கள் பதவி காலியாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.அவற்றை பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். முதல்வர் மருத்துவ காப்பீடு திட்டத்தில் அறுவை சிகிச்சைகளை அதிகரிக்க அறிவுறுத்தினார். மருத்துவமனை துறை தலைவர்கள் மற்றும் டாக்டர்களிடம் ஆலோசனை நடத்தினார்.துணை முதல்வர் விசாலாட்சி, மருத்துவ கண்காணிப்பாளர் குமரவேல், நிலைய மருத்துவர் மகேந்திரன், உதவி நிலைய மருத்துவர்கள் ரபிக், தென்றல் உள்ளிட்ட டாக்டர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்