வரலாறு என்பது உண்மையாக இருக்க வேண்டும்
சென்னை: அதிகாரம் உள்ளது என்பதற்காக தங்களுடைய தலைவரின் வரலாற்றை பதிவு செய்வது அதிகார துஷ்பிரயோகம் என்று தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.அவர் கூறுகையில், பத்தாம் வகுப்பு புத்தகத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வரலாறு, பன்முக கலைஞர் என்ற தலைப்பில், கலைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. வரலாறு என்பது உண்மையை மட்டும் பதிவு செய்யக்கூடியதாக இருக்க வேண்டும்.அதிகாரம் உள்ளது என்பதற்காக, தங்கள் தலைவரின் வரலாற்றை பதிவு செய்வது அதிகார துஷ்பிரயோகமே. பல்வேறு அரசியல் தலைவர்கள் குறித்து, பல்வேறு தளங்களில் நல்லதையும், கெட்டதையும் கூட பதிவு செய்துள்ளனர். கண்ணதாசனின் 'வனவாசம்' புத்தகம் ஒரு பெரிய உதாரணம் என்பதை, தொடர்புடையவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அரசியல் அதிகாரத்தை முறையாக செலுத்த வேண்டும். இல்லையேல், அது நம்மையே தாக்கும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும், என்றார்.