உள்ளூர் செய்திகள்

மாணவர் வருகைப்பதிவில் முறைகேடு அறிக்கை இயக்குனருக்கு சமர்ப்பிப்பு

இடைப்பாடி: சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே மொரசப்பட்டியில் செயல்படும் தனியார் கல்வியியல் கல்லுாரி மாணவர்கள், 80 நாள் கற்றல், கற்பித்தல் பயிற்சிக்கு, கடந்த ஆண்டு செப்டம்பரில் பல்வேறு பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டனர். அதில், 16 பேர், இடைப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு வந்தனர். அதில், 3 பேர் பயிற்சிக்கு வராத நிலையில், வருகைப்பதிவேட்டில் கையெழுத்திட்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்து சில மாணவர்கள், முதன்மை கல்வி அலுவலருக்கு புகார் அனுப்பியதோடு, தகவல் அறியும் உரிமை சட்டத்திலும் பதில் கேட்டிருந்தனர்.அதற்கு சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் நேற்று முன்தினம் அளித்த பதிலில், மாணவர்கள் வருகைப்பதிவேட்டில் நடந்த முறைகேடு குறித்த புகாரில், சங்ககிரி மாவட்ட கல்வி அலுவலர் கோபாலப்பா(இடைநிலை) விசாரித்து கொடுத்த அறிக்கை பெறப்பட்டு, உரிய நடவடிக்கைக்கு பள்ளி கல்வி இயக்குனருக்கு அனுப்பப்பட்டுள்ளது என, கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்