மகேந்திரகிரி இஸ்ரோவில் செமி கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை
பழவூர்: மகேந்திரகிரி இஸ்ரோவில் செமி கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை வெற்றிகரமாக நடந்தது.மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் செமி கிரையோஜெனிக் இன்ஜினின் ஒரு பகுதியான பிரீ-பர்னர் இக்னிஷன் சோதனை வெற்றிகரமாக நடந்துள்ளதாக இஸ்ரோ தகவல் தெரிவித்தது. அடுத்தடுத்து பல்வேறு கட்ட சோதனைகள் நடத்தப்பட இருப்பதாக இஸ்ரோ வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.