உள்ளூர் செய்திகள்

இணையதளங்களில் தவறான தகவல்; சி.பி.எஸ்.இ., எச்சரிக்கை

சென்னை: சி.பி.எஸ்.இ.,யின் பாடத்திட்டம் குறித்து, இணையதளங்களில் வெளியிடப்படும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்களை நம்ப வேண்டாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.சி.பி.எஸ்.இ., வெளியிட்ட செய்திக்குறிப்பு:சில ஆன்லைன் தளங்கள், இணையதளங்கள் உள்ளிட்டவற்றில், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டங்கள் தொடர்பான மாதிரி வினாத்தாள்கள், பாட அம்சங்கள், சி.பி.எஸ்.இ., பாடம் தொடர்பான குறிப்புகள் உள்ளிட்டவை வெளியிடப்படுகின்றன.இந்த பதிவேற்றங்கள் பெரும்பாலும் தவறானதாக உள்ளன. எனவே, பொதுமக்கள், மாணவர்கள் நலன் கருதி, இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது. சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம், தேர்வு உள்ளிட்டவை தொடர்பான தகவல்கள், https://www.cbse.gov.in/ என்ற சி.பி.எஸ்.இ.,யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும்.அரசின் திட்டங்கள், சுற்றறிக்கைகள், அறிவிப்புகள் போன்றவை, சி.பி.எஸ்.இ.,யின் துறை சார்ந்த தளங்களான, https://www.cbseacademic.nic.in/, https://results.cbse.nic.in/, https://saras.cbse.gov.in/SARAS மற்றும் https://parikshasangam.cbse.gov.in/ps/ போன்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும்.எனவே, மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளிகள் தரப்பில், அதிகாரப்பூர்வமற்ற இணையதளங்களின் தகவல்களை நம்ப வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்