அனைத்து அரசு பள்ளியிலும் எல்.கே.ஜி.,: அமைச்சர் திட்டவட்டம்
பெங்களூரு: கர்நாடகாவில் அடுத்த கல்வியாண்டில், அனைத்து அரசு பள்ளிகளிலும் எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகள் கொண்டு வரப்படும் என மாநில துவக்கக் கல்வித் துறை அமைச்சர் மதுபங்காரப்பா தெரிவித்தார்.சி.எஸ்.ஆர்., நிதிபெங்களூரு விதான் சவுதாவில் நேற்று சி.எஸ்.ஆர்., எனும் கார்ப்பரேட் சமூக பொறுப்பு மாநாடு நடந்தது.இதில், துவக்கக் கல்வித்துறை அமைச்சர் மதுபங்காரப்பா பேசியதாவது:ஓராண்டுக்கு முன்பு, சி.எஸ்.ஆர்., மாநாட்டை நடத்தினோம். அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு சி.எஸ்.ஆர்.,நிதியை முழுதுமாக கல்விக்கு மட்டும் ஒதுக்க வேண்டும் என்று துணை முதல்வரிடம் பரிந்துரைக்கப்பட்டு இருந்தது.கல்வி முறையில் பல முன்னேற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. அடுத்து மூன்று ஆண்டுகளுக்கு, அசிம் பிரேம்ஜி அறக்கட்டளையுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.1,000 பள்ளிகள்ஏற்கனவே கல்யாண கர்நாடகா மாவட்டங்களில், 1,000 பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகள் துவங்கப்பட்டு உள்ளன; 38,000 குழந்தைகள் சேர்ந்துள்ளனர். அடுத்த கல்வியாண்டில் மாநிலத்தின் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகள் துவக்கப்படும்.எல்.கே.ஜி., முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளியிலேயே படிக்க வேண்டும் என்று கனவு கண்டுள்ளோம். தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகள் மேம்படுத்தப்படும்.துணை முதல்வர் சிவகுமார் பேசியதாவது:சி.எஸ்.ஆர்., நிதியின் மூலம் மேம்படுத்த, 2,000 பள்ளிகள் அடையாளம் காணப்பட்டு உள்ளன.ரூ.4 லட்சம் கோடிஎந்த பள்ளியை மேம்படுத்துவது என்பதை தொழிலதிபர்களே தேர்வு செய்து கொள்ளலாம். அரசு பள்ளியை, உங்கள் குழந்தைகளைப் போன்று பாவித்து, மேம்படுத்துங்கள். சர்வதேச அளவில் குழந்தைகளுக்கு தரமான கல்வி அளிக்க வேண்டும்.கர்நாடகாவில் 43 பெரிய நிறுவனங்கள், 4 லட்சம் கோடி ரூபாய் லாபம் சம்பாதிக்கின்றன. இதில், 8,063 கோடி ரூபாயை, சி.எஸ்.ஆர்., நிதிக்கு வழங்குகின்றன. இதை எங்களிடம் வழங்காமல், நீங்களே, அதுவும் கிராமப்புறங்களில் உள்ள பள்ளியை மேம்படுத்தலாம்.நகரங்களில் கிடைக்கும் கல்வியின் தரம், கிராமங்களில் உள்ள பள்ளிகளுக்கும்கிடைக்க வேண்டும். இதற்கு நானே சிறந்த உதாரணம். நானே கல்வி நிறுவனம் நடத்தி வருகிறேன். எங்களுக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தை, அரசு பள்ளிக்காக கொடுத்துள்ளோம்.