உள்ளூர் செய்திகள்

பயிற்சி ஐ.ஏ.எஸ்.களுக்கு பணி நியமன உத்தரவு

சென்னை: பயிற்சி ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 10 பேருக்கு பணி நியமன உத்தரவை தலைமை செயலாளர் முருகானந்தம் பிறப்பித்தார்.ஐ.ஏ.எஸ். தேர்ச்சி பெற்ற தேர்வர்கள் 10 பேர் பல்வேறு துறைகளில் பயிற்சி பெற்றுவந்தனர். அவர்களின் பயிற்சி காலம் நிறைவடைந்தததையடுத்து, அவர்கள் பல்வேறு மாவட்டங்களில் கூடுதல் கலெக்டர், சப் கலெக்டர்கள் ஆகிய பணிகளில் நியமிக்கப்பட்டனர். இதற்கான நியமன உத்தரவை தலைமை செயலாளர் முருகானந்தம் பிறப்பித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்