உள்ளூர் செய்திகள்

ஆசிரியர், மாணவர் இணைந்தால் புது கண்டுபிடிப்புகள் உருவாகும்

கோவை : ஆசிரியர்கள், மாணவர்கள் இணைந்து செயல்படும் போது, புதிய கண்டுபிடிப்புகள் உருவாகும் என ரால்டெக் நிறுவன தொழில்நுட்ப தலைவர் மாதேஸ்வரன் பேசினார்.கோவை அரசு தொழில்நுட்பக் கல்லுாரியில், அறிவுசார் சொத்துரிமை மையம் சார்பில் காப்புரிமை தாக்கல் செய்வது தொடர்பான, நடைமுறை நடவடிக்கைகள் மற்றும் வணிகமயமாக்கலின் போது ஏற்படும் சவால்கள் குறித்த, பயிலரங்கு நடந்தது.ரால்டெக் நிறுவன தொழில்நுட்ப தலைவர் மாதேஸ்வரன் பேசுகையில், ஆசிரியர்கள், மாணவர்கள் இணைந்து செயல்படும் போது, புதிய கண்டுபிடிப்புகள் உருவாகும். வெற்றிகரமாக தொழில்புரிவோர், தங்கள் கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமை பெறுவதில்லை. இதனால், சிக்கல் ஏற்படுகிறது. புதிய கண்டுபிடிப்புகள் வாயிலாக, தொழிலை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்லலாம், என்றார். முன்னதாக, கல்லுாரியின் அறிவுசார் சொத்துரிமை மைய ஒருங்கிணைப்பாளர் சேகர் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் மனோன்மணி தலைமை வகித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்