சி.ஏ., தேர்வு: திட்டமிட்டால் கஷ்டம் இல்லை
சி.ஏ., எனப்படும் சார்ட்டர்டு அக்கவுண்டண்ட் படிப்பிற்கான வழிமுறைகள், பாடங்கள் என அனைத்துவித வளங்களும் எளிதாக கிடைக்கின்றன. நாட்டின் எந்த சிறு கிராமத்தில் இருந்துகொண்டும் சி.ஏ., தேர்விற்கு எளிதாக பயிற்சி பெற முடியும்.குறிப்பாக, 40 லட்சம் சார்ட்டர்டு அக்கவுண்டண்ட்கள் நம் நாட்டுக்கு தேவைப்படுகின்றனர். ஆனால், சி.ஏ., படித்தவர்களோ குறைவு. அரசு, தனியார், தொழில் நிறுவனங்களில் மட்டுமின்றி சுய வேலைவாய்ப்புகளும் நிறைந்துள்ளதால், அதிகமானோர் சி.ஏ., படிப்பில் சேர்கை பெற வேண்டும்.பொறியியல், மருத்துவம் போன்ற படிப்புகளில் சேர்க்கை பெறுவது கடினம். ஆனால் பட்டம் பெறுவது ஓரளவு எளிது. ஆனால், சி.ஏ., தேர்வில் சேர்க்கை பெறுவது எளிது. தேர்வில் வெற்றி பெற்று சி.ஏ., தகுதியை பெறு-வது கடினம் என்ற கருத்து பரவலாக உள்ளது. இது சரியானதல்ல. வணிகவியல் மாணவர்கள் மட்டுமே சி.ஏ., தேர்வில் வெற்றி பெற முடியும் என்ற கருத்தும் உள்ளது. அறிவியல் பின்புலத்தை கொண்ட மாணவர்களுக்கு அனலெட்டிக்கல், லாஜிக்கல் திறன்அதிகம் உள்ளதால் அவர்களால் இத்தேர்வை எளிதாக அணுக முடியும்.மேலும் விரிவான தகவல்களுக்கு https://www.icai.org/