பள்ளி வகுப்பறை சூறை காஞ்சியில் அட்டூழியம்
காஞ்சிபுரம்: சின்ன காஞ்சிபுரத்தில் அரசு உதவிபெறும் ஏ.கே.டி., உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவில், மர்ம நபர்கள் உள்ளே நுழைந்துள்ளனர்.வகுப்பறை ஒன்றில், மின் விளக்கு, மின்விசிறி, மேஜை, நாற்காலி, கடிகாரம் என, வகுப்பறை பொருட்கள் அனைத்தையும் அடித்து நொறுக்கி சூறையாடி உள்ளனர். வழக்கம்போல், நேற்று காலை ஆசிரியர்கள் பணிக்கு வந்தபோது, வகுப்பறையில் உடைந்த பொருட்களை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.இது குறித்து, மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காவல் நிலையத்திலும் புகார் அளிக்க, பள்ளி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.