உள்ளூர் செய்திகள்

பாரதியார் பல்கலையில் நாளை செனட் கூட்டம்

கோவை : பாரதியார் பல்கலையின், 88வது செனட் கூட்டம் நாளை நடக்க உள்ளது.பல்கலை வளாகத்தில் நடக்க உள்ள இக்கூட்டத்தில், அனைத்து செனட் உறுப்பினர்களும் பங்கேற்க உள்ளனர். கூட்டத்தில் கடந்த ஓராண்டில் நடந்த முக்கிய நிகழ்வுகள், கல்லுாரிகளின் சாதனைகள், பெற்ற விருதுகள் குறித்து எடுத்துரைக்கப்படும்.இதையடுத்து அனைத்து கல்லுாரிகளும் 2023 டிச., 16 முதல், 2024, டிச., 15 வரை பெற்ற விருதுகள், சாதனைகள், முக்கிய நிகழ்வுகள் குறித்த விபரங்களை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூட்டத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட செனட் உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர்.பல்கலையில் மேற்கொள்ளப்பட உள்ள மேம்பாட்டு பணிகள், ஆராய்ச்சிகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும். ஏறக்குறைய ஓராண்டுக்குப் பின் செனட் கூட்டம் நடக்க உள்ளதால், பல்வேறு பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்