வேளாண் பல்கலை பணி தேர்வு தேதி அறிவிப்பு
தார்வாட்: தார்வாட், கும்பபூர் எம் நரேந்திரா எனும் இடத்தில் வேளாண் பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் எஸ்.ஆர்.எப்., எனும் சீனியர் ஆராய்ச்சியாளர் மற்றும் யங் புரொபஷனல் எனும் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது. இது பிப்ரவரி 5 ம் தேதி, காலை 11:00 மணி அளவில் கல்லுாரி வளாகத்தில் நடக்க உள்ளது.இத்தேர்வு, எழுத்து தேர்வுடன் கூடிய நேர்முகத் தேர்வாக நடக்க உள்ளது. இத்தேர்வில் பங்கேற்பவர்கள் முன்கூட்டியே இணையத்தில் பதிவு செய்ய வேண்டும். எஸ்.ஆர்.எப்., பணிக்கு முதுகலை பட்டமும், யங் புரொபஷனல் பதவிக்கு இளங்கலை பட்டம் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.சீனியர் ஆராய்ச்சியாளருக்கு, மாதம் 37,000 ரூபாய்; யங் புரொபஷனல் பதவிக்கு மாதம் 30,000 ரூபாய் சம்பளமாகவும் வழங்கப்படும். அரசு வேலைக்கு தயாராகி கொண்டிருக்கும் மாணவர்களுக்கு, இந்த அறிவிப்பு புத்துணர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.