உள்ளூர் செய்திகள்

கணினி குற்றங்களை தடுக்க மாணவர்கள் பங்கு அவசியம்

மதுரை: மதுரை அமெரிக்கன் கல்லுாரியில் முதுகலை பொருளாதாரத் துறை சார்பில் கணினி குற்றங்கள் - கவலைகளும் கவனங்களும் என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கு நடந்தது. முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் தலைமை வகித்தார். மாணவர்கள் பகத், லாவண்யா வரவேற்றனர். துறைத் தலைவர் முத்துராஜா தொகுத்து வழங்கினார்.மாவட்ட சைபர் கிரைம் ஏ. டி.எஸ்.பி., கருப்பையா பேசுகையில், சைபர் குற்றங்களில் மாணவர்கள் அதிகமாக ஈடுபடுகின்றனர். இக்குற்றங்களால் பாதிக்கப்பட்டால் 1930 என்ற அவசரகால உதவி எண்ணில் தொடர்புகொள்ளலாம் என்றார்.எஸ்.ஐ.,க்கள் கார்த்திகேயன், சுதர்சனா, குற்றங்களின் வகைகள், அஜாக்கிரதையால் ஏற்படும் விளைவுகள் குறித்து விளக்கினர். சைபர் குற்றங்களில் இருந்து காத்துக்கொள்ளும் வகையில் சில செயலிகளை குறிப்பிட்டனர். மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. மாணவி லோக கீர்த்தனா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்