உள்ளூர் செய்திகள்

தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில் பள்ளிகளுக்கும் ஸ்டால்கள்

மதுரை : மதுரை தமுக்கம் மைதானத்தில் மார்ச் 26ல் துவங்கும் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில் இந்தாண்டு முதல் பள்ளிகளுக்கான ஸ்டால்களும் இடம் பெறுகின்றன. ஸ்டால்கள் அமைப்பதற்கான முன்பதிவு நடக்கிறது.பிளஸ் 2வுக்கு பின் உயர் கல்வியில் என்ன படிப்புகளை தேர்வு செய்யலாம், எங்கு படிக்கலாம் என பயனுள்ள கல்வி ஆலோசனைகளை அள்ளி வழங்கும் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி மார்ச் 26, 27, 28 ஆகிய நாட்கள் கோலாகலமாக நடக்கிறது.பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கு அவர்கள் எதிர்கால நலன் கருதி கல்வி, வாழ்க்கைக்கு வழிகாட்டும் வகையில் நடக்கும் இந்நிகழ்ச்சியில் நீட், ஜே.இ.இ., நுழைவு தேர்வுகளில் சாதிப்பதற்கான டிப்ஸ் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகள் நடக்கின்றன.இதில் 20க்கும் மேற்பட்ட நிபுணர்கள், கல்வியாளர்கள் நேரடியாக ஆலோசனை வழங்க உள்ளனர். இதற்காக தமிழகத்தில் 100க்கும் மேற்பட்ட முன்னணி கல்லுாரிகள், பல்கலைகள், கல்வி நிறுவனங்கள் தங்கள் ஸ்டால்களை அமைக்கின்றன.இதில் விண்ணப்பம் முதல் அட்மிஷன் வரை அனைத்து தகவல்களும் மாணவர்கள், பெற்றோருக்கு தெரிந்துகொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பள்ளிகளுக்கு ஸ்டால்இந்தாண்டு முதல் பள்ளிகளுக்கென்று தனி ஸ்டால்கள் அமைய உள்ளன. அதிக மதிப்பெண் வாங்க வைக்கும் பள்ளி எது, படிப்போடு கூடுதல் தகுதி பெற வைக்கும் பள்ளி எது, வித்தியாசமான பாடப்பிரிவுகள் உள்ள பள்ளி எது, நீட் வெற்றியை எளிதாக்கும் பள்ளி எது, உயர்கல்வி செல்ல வழிகாட்டும் பள்ளி எது, சாதாரண மாணவரையும் சாதனை மாணவராக்கும் பள்ளி எது என்ற தகவல்களை இந்த ஸ்டால்களை பார்த்த பின்பு மாணவர்கள், பெற்றோர் தெரிந்துகொள்ள முடியும்.மதுரையில் உள்ள பள்ளிகள் தங்கள் ஸ்டால்கள் அமைக்க 99409 17679 என்ற எண்ணில் முன்பதிவு செய்யலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்