உள்ளூர் செய்திகள்

யோகா இயற்கை மருத்துவ படிப்பு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

சென்னை: பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், பி.என்.ஓய்.எஸ்., என்ற யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புகளில் சேர, ஆன்லைன் வழியே விண்ணப்பிக்கலாம் என, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை அறிவித்துள்ளது.அதன் அறிக்கை:சென்னை, செங்கல்பட்டு அரசு கல்லுாரிகளில் உள்ள, 160 பி.என்.ஓய்.எஸ்., இடங்கள் உட்பட, 17 சுயநிதி கல்லுாரிகளில், 1,500 பி.என்.ஓய்.எஸ்., இடங்கள் உள்ளன. இவற்றில் சேர, இன்று முதல், www.tnhealth.tn.gov.in , www.tnayushselection.org இணையதளங்கள் வழியே விண்ணப்பிக்கலாம்.ஆன்லைன் வழியே மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான தகவல் குறிப்பேடு இணையதளங்களில் கொடுக்கப்பட்டுள்ளது. ஆக.1., விண்ணப்பிக்க கடைசி நாள்.அரசு சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்க விரும்புவோர், ஆன்லைன் வழியே விண்ணப்பித்த பிறகு, விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, உரிய சான்றிதழ் நகல்களுடன், செயலர், தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை கமிஷனர் அலுவலகம், அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை என்ற முகவரிக்கு ஆக., 1ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்